சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..
Sep 24, 2024, 10:56 IST1727155569567
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மற்றும் நாகர்கோயிலில் தலா ஒரு இடத்திலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.