சென்னையில் என்.ஐ.ஏ சோதனை - 3 பேர் கைது

 
nia

 சென்னை புறநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.  பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

NIA

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்தது. போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

arrest

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் கைது செய்யப்பட்டுள்ளார் .  போலி ஆதார் அட்டை தயாரித்து, அதன் மூலம் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.