சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

 
NIA

சென்னை, நெல்லை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் NIA அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. 

nia

அத்துடன் கோவை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

tn

ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித் என்பவரது வீட்டிலும், காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.