சென்னை உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து சதி செயல்களை முறியடிக்கும் பணிகளில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபட்டு வருகிறது. அதன்படி தமிழகத்திலும் அவ்வபோது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். IS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.