10,12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி அடுத்தவாரம் திருப்புதல் தேர்வு- பள்ளிக் கல்வித்துறை

 
exam

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

திருப்புதல் தேர்வு: சமூக அறிவியல் வினாத்தாளில் குளறுபடி- பத்தாம் வகுப்பு  மாணவர்கள் அதிர்ச்சி | Social revision examination was tough - hindutamil.in

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. மருத்துவக்கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 10 வரை விடுமுறை அளித்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். 

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 10,11 மற்றும் 12ம் வக்கு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி, ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.