#NEW YEAR RESOLUTION : புத்தாண்டு வந்தாச்சு! புத்தாண்டு உறுதிமொழி எடுக்க ரெடியா? இதோ சில ஐடியா!

 
1 1

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல்:

பரபரப்பான இந்த சூழலாலும் நீண்ட அலுவலக நேரத்தினாலும் நாம் நமது அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிட தவறி விடுகிறோம். மேலும், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க நேரம் கிடைப்பது கடினமாகிறது. அடுத்த வருடத்தில் இருந்து, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட தீர்மானம் எடுங்கள்.

பட்ஜெட்:

அடுத்த ஆண்டு, உங்கள் வரவு செலவுகளை எப்படி கையாள்வது என்று திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். இப்படி திட்டமிட்டால் உங்கள் கண்களுக்கு தேவையற்ற செலவுகள் தெரியும். இதனால் நீங்கள் பல வகைகளில் சேமிக்கவும் செய்யலாம். 

விளையாட்டு:

இந்த நவீன உலகில் நம்மில் பலர் வீட்டிற்குள்ளேயே செல்போனில் மூழ்கி விடுகிறோம். அதனால், வரும் வருடத்தில் ஏதேனும் ஒரு வெளிபுற விளையாட்டிலாவது பங்கேற்க வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடல் நலனுக்கும் நன்மைகள் ஏற்படும். 

புதிதாக சமைத்தல்:

உங்களுக்கு சமையல் பிடிக்கும் என்றால், வாரம் ஒரு முறை ஹெல்தியான ஏதேனும் ஒரு புதிய உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு வழக்கமான சமையலில் இருந்து புது வகை உணவுகளை செய்து சாப்பிட ஆர்வம் ஏற்படும். 

புத்தகங்கள் வாசித்தல்:

வாசிப்புப் பழக்கம் பல்வேறு தலைப்புகளில் உங்கள் அறிவை மேம்படுத்த உதவும். ஆண்டு முழுவதும் உத்வேகத்துடன் இருக்க, நீங்கள் புத்தகக் க்லப்களில் சேரலாம் அல்லது மின் புத்தகங்களை வாங்கலாம். அவை அறிஞர்கள் எழுதிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கதை புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை படித்து உங்கள் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளலாம். 

வீட்டை சுத்தம் செய்வது:

அன்றாட வேலை காரணமாக, சில சமயங்களில் நமது வீட்டை ஒழுங்காக வைத்திருக்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு முதல், ஒவ்வொரு வாரமும் சில நாட்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கலாம் என உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

கெட்ட பழக்கங்களை விடுதல்:

நம்மை வளர விடாமல், நம்மை ஒரே இடத்தில் வைத்திருக்கும் கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பது நமக்கு தெரியும். அந்த வகையில், உங்களிடம் நீங்கள் மாற்ற நினைக்கும் கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது நல்லது. 

இவற்றை தவிர, சரியான நேரத்திற்கு தூங்கி எழுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்வது என்ற உறுதி மொழிகளையும் நீங்கள் உங்களது மனதில் எழுதிக்கொள்ளலாம்.