இந்தியர்களுக்கான புதிய காலணி அளவு முறை..!

 
1

டிசம்பர் 2021 இல், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CLRI) இணைந்து இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘இந்திய காலணி அளவு முறையை’ ( BHA ) உருவாக்கியுள்ளது.

தற்போது, இந்தியாவில் காலணி அளவு முறையானது ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், இந்தியருக்கு ஏற்ற வகையில் காலணி உருவாக்கும் வகையில் பா அளவு முறையானது இருக்கிறது என கூறப்படுகிறது.  

பாரதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'பா' என பெயரிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதில் முழுக்க முழுக்க இந்தியர்களை சோதனை செய்து காலணிகள் உருவாக்கப்படும்.

இந்தியர்கள் பயன்படுத்தும் காலணி வகைகள் பெரும்பாலும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாட்டு மக்களின் காலணி அளவுகளில் தான் இருந்து வருகின்றன. இதனால் பலருக்கு கால்களில் அசௌகரியம், கொப்புளம் குறைபாடுகள், வலி என பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. தற்போது இந்த குறைகளை களையும் வகையில் உள்நாட்டிலேயே அதாவது இந்தியாவிலேயே புதிய பா வகை ஷூக்கள் தயாராக உள்ளன. இந்த அறிவிப்பை மத்திய அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.