கரூரில் புதிய காலணி தொழிற்சாலை- முதல்வர் விஜய் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
கரூரில் ரூ.1700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
கரூர் மாவட்டத்தில், 'எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட்' (Evervan Kothari Footwear Pvt. Ltd.) நிறுவனத்தின் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைக்கான அடிக்கல்லை முதலமைச்சர் விஜய் நாட்டவுள்ளார். பிப்ரவரி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ₹1,700 கோடி மதிப்பிலான இத்திட்டம், சுமார் 13,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய தொழிற்சாலையின் மூலம் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு புதிய வேலைப்புகள் உருவாகும்.
2025 பிப்ரவரி மாதம் திமுக அரசில் ரூ.5000 கோடி முதலீட்டில் கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலணி உற்பத்தி ஆலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் ஒரு பகுதியாக நாளை ₹1700 கோடி முதலீட்டில் இந்த முதல் ஆலை கரூரில் தொடங்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலும் ஆலை அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

