அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம்

 
முதல்வர் நாற்காலியில் விஜய்!

சென்னை பட்டினப்பாக்கம் / Foreshore Estate-ல்  ரூ.1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இதற்கு பட்டினப்பாக்கத்தை சுற்றியுள்ள 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "எங்கள் வாழ்வாதாரமான கடற்கரை அணுகல் பறிக்கப்படும், இது எங்கள் வீடு" என்று சீனிவாசபுரம் கடற்கரையில் கருப்புக் கொடி ஏந்தி, கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இதற்கு திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்ததால் அரசுக்கு நெருக்கடி அதிகமானது. 

இந்த நிலையில், தமிழக அரசு மாற்று இடமாக *அண்ணா சாலையில் உள்ள 13.22 ஏக்கர் பல்லவன் இல்ல வளாகத்தை பரிசீலித்து வருகிறது.  இந்த வளாகத்தில் தற்போது, MTC தலைமையகம், SETC தலைமையகம், 2 MTC பணிமனைகள் உள்ளன. 

ஏன் பல்லவன் இல்லம்?

1. இது ஏற்கனவே அரசுக்கு சொந்தமான நிலம், அதனால் புதிதாக நிலம் கையகப்படுத்த தேவையில்லை, மக்களை அப்புறப்படுத்த வேண்டியதில்லை.
2. பஸ், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து போக்குவரத்து வசதியும் இருப்பதால் ஊழியர்கள், பொதுமக்களுக்கு எளிது.
3. ஏற்கனவே திமுக ஆட்சியில் கட்டப்பட்டு பின்னர் மருத்துவமனையாக மாற்றப்பட்ட ஓமந்தூரார் அரசு தோட்டத்துக்கு மிக அருகில் உள்ளது. 

பல்லவன் இல்லம் தேர்வு செய்யப்பட்டால், MTC / SETC தலைமையகங்களை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு மாற்ற அரசு யோசித்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  ஆனால் இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "அண்ணா சாலை ஏற்கனவே டிராஃபிக் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது, இங்கு தலைமைச் செயலகம் கட்டினால் போக்குவரத்தை கட்டுப்படுத்தவே முடியாது, இது பட்டினப்பாக்கத்தை விட 100 மடங்கு தவறான முடிவு" என்று அறிக்கை விட்டுள்ளார்.