பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்- அரசாணை வெளியீடு
Sep 9, 2026, 17:39 IST1788955785641
புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்களை அமைக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்கத் திட்டம் எனவும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடக் கலை நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக்குழு, கட்டட வடிவமைப்பு, வரைபடம் தயாரிக்க குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை பொதுப்பணித் துறை தயாரிக்க வேண்டும் என அரசின் பொதுத் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

