சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்க புதிய திட்டம்!!

 
govt

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

accident

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுவதும் வழக்கம் . அதே சமயம் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர் ஆக இருக்கலாம்,  மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்குபவராக இருக்கலாம் , அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவராக இருக்கலாம். இப்படியாக  பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.  

tn

கடந்த 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 55 ஆயிரத்து 682 விபத்துக்கள் பதிவாகியுள்ளது.  இது 2020 ஆம் ஆண்டு விட பத்தாயிரம் சாலை விபத்துக்கள் அதிகம் கொண்டதாக காணப்பட்டது.  தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 2021 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 384 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் இந்தியாவில்   சாலை விபத்துகளால் அதிக மரணங்கள் நேரிடுவதில்  தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில்  தமிழ்நாடு அரசு வெளியிட்டது. போக்குவரத்து காவலர்கள் உடலில் கேமராவை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். எலக்ட்ரானிக் இன்ஃபர்மென்ட் டிவைஸை பயன்படுத்தி போக்குவரத்து விதிமுறைகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தானியங்கி வண்டி எண்ணறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் மூலம் அபரதா சீட்டு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.