ஊட்டி செல்பவர்களின் கவனத்திற்கு...! இது தெரியாம போகாதீங்க...!
கோடை சீசன் முடியும் வரை உதகைக்கு வரும் குன்னூர் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், உதகை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அளித்த பேட்டியில், கோடை சீசன் முடியும் வரை உதகைக்கு வரும் குன்னூர் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. உதகை வரும் வாகனங்கள் அனைத்தும் குன்னூர் மலைப்பாதை வழியாக வர வேண்டும்.
உதகையிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில், கவனத்துடன் மெதுவாக தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். உதகை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 8 மணி முதல் மாலை 8- மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


