டிசம்பர் 1 முதல் புதிய விதி...இனி விசா இல்லாமல் மலேசியாவுக்குப் பறக்க முடியாது!
மலேசிய குடிவரவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில்; 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியர்களுக்காக விசா விலக்குச் சலுகை திரும்பப் பெறப்படுகிறது. மலேசியாவிற்குப் பயணம் செய்யும் அனைத்து இந்தியர்களும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசாவைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 'MyVISA' இணையதளம் வழியாக இந்தியர்கள் மலேசிய புதிய விதிமுறைகளுடன் கூடிய விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். 7 வேலைநாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும்.அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதி, செப்டம்பர் 1க்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். விண்ணப்பம் காலாவதியானால், புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும், விசா விண்ணப்பக் கட்டணம் திரும்பத் தரப்படாது ,
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

