புறநகர் ரயிலில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது!

 
train

சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட் பெற, கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டிருப்பது அவசியம் என்ற அறிவிப்பு அமலுக்கு வந்தது.

train

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை கடந்த 8ஆம் தேதி அறிவித்தது. அதில் மாதாந்திர சீசன் டிக்கெட் பெற, சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்கும் நபர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்,  பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்,  தடுப்பூசி செலுத்தாமல் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அத்துடன் இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஜனவரி 31ஆம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

train

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கான கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டிருப்பது அவசியம் என்ற அறிவிப்பு இன்றுமுதல் அமலுக்கு வந்தது. மாதாந்திர சீசன் டிக்கெட் பெற 2 தவணை தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை மின்சார ரயில்களில் 50 விழுக்காடு இருக்கையில் பயணிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை புறநகர் ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டில், தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சிடப்படும். பயணிகள் ஆதார் எண், சீசன் டிக்கெட், கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டி புதிய சீசன் டிக்கெட் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.