ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு :இனி No posts.. No Likes..!

 
1 1

ராணுவ வீரர்களுக்கு புதிய கொள்கை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின் படி, ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராமை 'பார்ப்பதற்கு மட்டுமே' பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது ராணுவத்தினர் இன்ஸ்டா, யூடியூப், X-ல் கான்டன்ட்களை பார்க்க, கண்காணிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கான்டன்ட்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள், அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, தகவல்களை தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பதிவுகளை பார்க்கலாம். ஆனால், அதல் பதிவுகள் வெளியிடுவது, கருத்து பதிவேற்றம் செய்வது, பதிவுகளை பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது அல்லது செய்தி அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

யூடியூப், எக்ஸ் மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடக செயலிகளை தகவல்கள் மற்றும் அறிவை பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகள் மூலம் பொதுவான தகவல்களை பரிமாறி கொள்ளலாம். அதுவும் தெரிந்த நபர்களுடன் மட்டுமே தகவல்களை பரிமாறி கொள்ளலாம். தகவல்களை பெறுபவர் யார் என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம்.

லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.