டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு! மதுப்பிரியர்களுக்கு கிடுக்குப்பிடி!!

 
tasmac

முகக்கவசம் அணிந்துவரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

TASMAC increases prices of liquor - The Hindu

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது.

இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக்கூடாது.

அனைத்து மதுக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.