“நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” - ரூ.11 கோடி மதிப்பீட்டில் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர்!!

 
cm stalin

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி பயிரானது சராசரியாக 1.62 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஒரு எக்டருக்கு 400 கிலோ உற்பத்தி திறனுடன் 3.95 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.  தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் நூற்பாலைகள் இயங்குவதால் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உயர்தரப் பருத்தி உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி அதிகரிக்கவும் பருத்தி நூற்பாலைகளில் பெருகிவரும் தேவைகளை பூர்த்தி செய்யவும்,  தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

stalin

 அவற்றில் மேலும் ஒரு சிறப்பம்சமாக பருத்தி விவசாயிகளின் நலன் கருதி ரூபாய் 500 கோடி மதிப்பில் நீண்ட இழைப் பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25 ஆயிரம் எக்டர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் என்ற ஒரு புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 5 விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

stalin

இத்திட்டத்தில் விருப்பம் உள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தினால் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடியை 1.70 லட்சம் எக்டர் ஆக உயர்த்தவும்,  பருத்தி மகசூல் ஒரு எக்டருக்கு 380 கிலோவிலிருந்து 430 கிலோ என்ற அளவிற்கு பஞ்சு மகசூலை உயர்த்திப் உற்பத்தியினை 4.30 லட்சம் பொதிகள் ஆக உயர்த்த வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.