தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்... ரகசியமாக ஆலோசிக்கும் தலைமை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

2026 தேர்தலுக்கு பிறகு மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மாநில தலைவர் பதவியை பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு ஆகியோரும் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மாநில தலைவர் பதவிக்கு தகுதியான 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்ய கிரிஷ் சோடங்கருக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லும் ஒரு புதிய நபரை மாநில தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில தலைவரை தேர்வு செய்யும் பணியினை ரகசியமாக மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

