நடிகர் விஜய்யின் ‘The GOAT’ புதிய போஸ்டர் - இணையத்தில் வைரல்!!

 
tn

நடிகர் விஜய்யின்  'THE GREATEST OF ALL TIME' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. 

vijay

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்னேகா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது. இப்படத்திற்கான ஷூட்டிங்  நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் 'The Greatest Of All Time' படத்தின் புதிய போஸ்டரை  படக்குழு வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது.