அரசியலில் அடுத்த திருப்பம்... அதிமுகவில் அண்ணாமலை?
Jul 3, 2026, 19:59 IST1783088973545
அண்ணாமலையை அதிமுகவிற்கு அழைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுவருகிறது.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறிவரும் நிலையில், அதனை தடுக்கும் முயற்சியாக அண்ணாமலையை அழைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் சிலர் அண்ணாமலையை அதிமுகவிற்கு அழைக்க தலைமையுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். வீ த லீடர்ஸ் எனும் அமைப்பை நடத்திவரும் அண்ணாமலை விரைவில் அரசியல் கட்சியை துவங்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் அதிமுகவில் இணைந்து பணியாற்ற வருமாறு அண்ணாமலையை அழைக்க சில மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இபிஎஸ் இடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை இணைந்தால் அதிமுகவிற்கு புதிய வலிமை மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும் என அதிமுக நிர்வாகிகள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

