புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் ‘செங்கோல் கதை’

 
செங்கோல்

வரும் 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா கான உள்ளது. அதில் தமிழகத்தில் தயாரான செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோவலை 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவாடுதுறை ஆதினம் தந்த செங்கோலை இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட் பேட்டன் பிரபு நேருவிடம் ஒப்படைத்து சென்றார். அதன் பின்  தற்போது வரை அந்த செங்கோலானது அலாகாபாத் மியுசியத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. 

1947 to 2023: Tamil Nadu scepter in Indian Parliament   1947 டூ 2023: இந்திய பார்லிமென்டில் வலம் வரும் தமிழக செங்கோல்

28 ஆம் தேதி அந்த செங்கோல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டு தமிழரின் சிறப்பையும், செங்கோலின் முறையை பற்றி நாடறிய விளக்கும் விதமாக வைக்கப்பட உள்ளது. செங்கோல் என்பதற்கு செம்மை என்பது பொருள். சோழர் காலத்தில் ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னரிடம் ஆட்சி மாறுவதை குறிக்கும் வகையில் செங்கோல் கைமாற்றப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இரவு 11:45 மணிக்கு நம்நாடு சுதந்திரம் அடைந்ததாக கூறி மவுண்ட் பேட்டன் பிரபு அன்றைய மதராஸ் மாகாணம் ஆன தமிழ் நாட்டில் திருவாடுதுறை ஆதினத்தை அணுகினார். ஆட்சி மாற்ற முறையை அறிவிக்க என்ன செய்ய வேண்டும் என மவுண்ட் பேட்டன் பிரபு கேட்க. உடனே  5 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை உருவாக்க திருவாவடுதுறை ஆதினத் தலைவர் உத்தரவிட்டார். . அதன்படி உமிடி பங்காரு ஜுவல்லரியில் தயாரிக்கப்பட்ட செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரபு நேருவிடம் ஒப்படைத்தார்.

செங்கோல்

செங்கோலின் மேல் பகுதியில் நந்தி , மகாலட்சுமி மற்றும் கொடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ள காலியான பகுதியில் தமிழ் எழுத்துக்கள் பொரிக்கபட்டுள்ளது. 5.03 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்று தயாரிக்கப்பட்ட செங்கோலானது முழுக்க முழுக்க கைகளால் 30 நாட்கள் கால அளவை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு தலைமுறைக்கு பிறகு எங்கள் மூதாதையார்கள் தயாரித்த செங்கோலால் இன்று நாங்கள் பெருமை அடைவதாக உமிடி பங்காரு உரிமையாளர் ஜித்தேந்தர் தெரிவித்துள்ளார்.