சபரிமலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு..!

 
1 1

சபரிமலை அய்யப்பன் கோவில், மாளிகைபுரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று நடைபெற்றது. குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய மேல்சாந்திகள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.