#BREAKING காலை உணவு திட்டத்தில் உணவின் சுகாதாரத்தை உறுதி செய்ய புதிய நடவடிக்கை!

 
ச்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!  TN CM C. Joseph Vijay expand the Kamarajar Breakfast scheme to Classes 6 to  8

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒரு ஒருங்கிணைப்பு ஆசிரியர் (Nodal Teacher) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நோடல் ஆசிரியர் நியமிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உணவு சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்வதே இவரது பணி என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோடல் ஆசிரியரின் 3 முக்கிய பணிகள்:

1.  சமையலறை தூய்மை, பாத்திரங்கள் சுத்தம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

2.  மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலில் வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

3.  ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அலுவலரால் உடனுக்குடன் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.