``வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி''- வானிலை மையம்
தெற்கு அந்தமான் கடற்பரப்பில் நவ.29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை மைய தகவலின்படி, தெற்கு அந்தமான் கடற்பரப்பில் நவ.29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் நவ.30ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். டிசம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடற்கரை பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், தேனி, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

