புதிய பயணம் தொடங்குகிறது! ட்விட்டரில் ட்விஸ்ட் வைத்த கமல்ஹாசன்

 
ட் ட்

நடிகர் கமல்ஹாசனின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Image

இந்தியன் - 2 படத்திற்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தும் விலகிய கமல்ஹாசன்,  அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து, கமல்ஹாசன் யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், ’புதிய தோற்றம் புதிய பயணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், கமலின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதை தொடர்ந்து சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்களின் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் எனக் கூறப்படுகிறது.