"கடைசி 2 ஒருநாள் போட்டிக்கு புதிய கேப்டன்!" – நியூசிலாந்து செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!
நியூசிலாந்து செல்ல உள்ள இந்திய அணி, 5 'டி-20' (அக். 22, 24, 27, 30, நவ. 1), 5 ஒருநாள் (நவ. 4, 7, 10, 13, 15), 2 டெஸ்ட் (நவ. 19-23, நவ. 27-டிச. 1) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே 'டி-20' தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, ஒருநாள், டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியானது.முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக சுப்மன் கில், துணை கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்படுவர். கடைசி இரு போட்டிகளுக்கு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர், துணை கேப்டனாக இஷான் கிஷான் இருப்பர். சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி இடம் பெற்றுள்ளனர்.டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் முழங்காலில் காயமடைந்த இவர், உடற்தகுதியை பொறுத்து 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யப்படுவார்.
ஒருநாள் அணி (முதல் 3 போட்டி): சுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விராத் கோலி, ராகுல், இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னுார் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.ஒருநாள் அணி (4-5வது போட்டி): ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), இஷான் கிஷான் (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விராத் கோலி, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், அகிப் நபி, குர்னுார் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குமார் குஷாக்ரா, யாஷ் தாகூர், குல்தீப் யாதவ்.
டெஸ்ட் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷாப் பன்ட், துருவ் ஜுரெல், ரவிந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ்.

