சுமார் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

 
sekar

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக இரண்டு  நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், இராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பி.ஆர்.என்.கார்டன், பிரகாசம் சாலையில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட நிதியின் கீழ், ரூ.2.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர் மற்றும் வார்டு-55க்குட்பட்ட அப்பு மேஸ்திரி தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், ரூ.1.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். 


இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப.நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி,  மண்டலக் குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் திரு. திரு.வெ. பரிமளம், மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.