மாமியார் சண்டை போட்டதால் புதுமாப்பிள்ளை விஷமருந்தி தற்கொலை

 
suicide

நிலக்கோட்டை அருகே புது மாப்பிள்ளை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 suicide

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போடியகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அழகுராஜா. அவருக்கு வயது 29. இவருக்கும் இதே ஊரைச் சார்ந்த யுவராணி (வயது 21) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அழகுராஜா ஊட்டியில் தங்கி கவரிங் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த தலை பொங்கலுக்கு தனது மனைவியை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த மன வருத்தத்தில் இருந்த மனைவி யுவராணி மற்றும் அவரது தாய், உறவினர்கள் பொங்கல் முடிந்து வீட்டிற்கு வந்த அழகுராஜாவிடம்  பொங்கல் பண்டிகை அதுவும் தலைப்பொங்கல் பண்டிகையின் போது எப்படி நடந்து கொள்வது என அறிவுரைகள் கூறி சண்டை போட்டுள்ளனர். 

இதனால் மனம் உடைந்த அழகுராஜா தனது மனைவியை பொங்கலுக்கு அழைக்க வராமல் வெளியூரில் தங்கி விட்டோமே என்று வீட்டிற்கு வெளியே சென்று பூச்சி மருந்தை அருந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்படும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.