3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..

 
draupadi murmu draupadi murmu


கோவா, ஹரியானா , லடாக் 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கோவா, ஹரியானா , லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கோவா ஆளுநராக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான அசோக் கஜபதி ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இவர் 2014 - 2018 வரை பாஜக ஆட்சியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து குறிப்பிடத்தக்கது.  

Imageமேலும், ஹரியானா ஆளுநராக அசிம் குமார் கோஷ்  நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், லடாக் துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.