சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட புதிய அரசு பேருந்துகள் : என்ன நடந்தது?
சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 10-க்கும் மேற்பட்ட புதிய மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்த பேருந்துகள் முறையான பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளது என்றும், அந்த பேருந்துகளுக்கு சுங்கச்சாவடியை கடப்பதற்கான ஃபாஸ்டேக் வசதியும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த பேருந்துகள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டது.
பேருந்துகள் சுமார் 10 நிமிடங்கள் வரை சுங்கச்சாவடியில் பேருந்துகள் நின்றுள்ளது. இதையடுத்து சுங்கச்சாவடி அதிகாரிகளும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, புதிய பேருந்துகள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய மாநகர பேருந்துகள், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது சுங்கக்கட்டணம் செலுத்தாததால் பேருந்துகளை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்..ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில்… pic.twitter.com/ISWmdwMePy
— PttvOnlinenews (@PttvNewsX) September 24, 2026