செம்மங்குப்பத்தில் புதிதாக தமிழகத்தை சேர்ந்த கேட் கீப்பர் நியமனம்

 
ச் ச்

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்கீப்பர் அலட்சியம் காரணமாக பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவ மாணவிகள் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த கேட் கீப்பர் கேட்டை மூடாதே காரணம் என விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து கேட் கீப்பர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் ரயில்வே துறையால் டிஸ்மி செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பகுதியில் புதியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். 

திருத்தணியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே துறையில் பணியாற்றி வருவதாகவும் இன்று தற்காலிகமாக பணியமத்தியதாகவும் ரயில்வே விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கேட் கீப்பராக உள்ள நிலையில் அவர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர் இங்கு கேட் கீப்பர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் அவர் இன்டெர்லாக் சிஸ்டம் இல்லாத ரயில்வே கேட்டை எப்படி இயக்குவது என கூறியுள்ளார்