திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார் முதல்வர்!!

 
stalin

திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாடை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் ,பூசாரிகளுக்கு புத்தாடைகளை திருக்கோயில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளையும் வழங்கும் அடையாளமாக, 12 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.

stalin

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, திருக்கோவில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணி பட்டியலின்படி, பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

stalin

திருக்கோவில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும், திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாச்சாரியார் ,பூசாரிகளுக்கு மயில்கண் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில், மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற கால் சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படுகிறது.  இதன்மூலம் 30 ஆயிரத்து 684 திருக்கோவிலில் பணிபுரியும் சுமார் 52 ஆயிரத்து 803 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். 

stalin


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் இருந்து பணிக்கு வரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில், புத்தாடைகள் மற்றும் சீருடைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ,தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.