டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு சான்றிதழ் (RC) வழங்கும் முறையில் புதிய மாற்றம்!

 
நாடு முழுவதும் ஒரே டிரைவிங் லைசன்ஸ் – நாளை முதல் அமல்!

தமிழகத்தில், ஓட்டுநர் உரிமம் மற்றும் Registration Certificate-ஐ முழுமையாக டிஜிட்டல் முறையில் வழங்க உத்தரவிட்டுள்ளது. 15.9.2026 முதல் புதிய DL மற்றும் RC-ஐ பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யலாம்.

13.09.2026 முதல் முதல் ஒரு ஆண்டுக்கு DL மற்றும் RC-ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்யப்படும் ஆவணங்களில் QR Code இடம்பெறும். அதனை ஸ்கேன் செய்து அரசு தரவுத்தளத்தில் உள்ள அசல் பதிவுடன் உடனடியாக சரிபார்க்க முடியும்.  டிஜிட்டல் DL/RC-ஐ m-Parivahan மற்றும் DigiLocker போன்ற வசதிகளுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
 தேவையெனில் Parivahan Portal மூலம் பொதுமக்களே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மேலும், அரசு அங்கீகரிக்கப்பட்ட e-Seva மையங்களில் கட்டணம் செலுத்தி பிரிண்ட் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும். QR Code தெளிவாக இருந்து, மின்னணு முறையில் அசல் பதிவைச் சரிபார்க்க முடிந்தால், Plain Paper / Laminated Form / Digital Form ஆகிய வடிவங்களில் உள்ள DL/RC ஏற்றுக்கொள்ளப்படும்.

12.09.2026க்குப் பிறகு, போக்குவரத்துத் துறையால் இதுவரை வழங்கப்பட்டு வந்த Physical DL மற்றும் RC-ஐ அச்சிட்டு தபால் மூலம் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் வழங்கல் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் Motor Vehicles Act, 1988 – Sections 211-A & 215-D மற்றும் Central Motor Vehicles Rules, 1989 – Rules 139-A & 172 ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு Motor Vehicles Rules-ல் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை, சம்பந்தப்பட்ட மத்திய சட்ட விதிகள் பொருந்தும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி வாகன ஓட்டுநர்களும் வாகன உரிமையாளர்களும் கையில் Physical DL/RC வைத்திருப்பதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைகிறது. QR Code மூலம் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் ஆவணமே முக்கிய ஆதாரமாக இருக்கும்.