முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி?
Jul 1, 2026, 16:37 IST1782904054054
சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தோழமை கட்சி தலைவர்களுடன் தனித்தனியாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கவில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதால் பங்கேற்கவில்லை என இடதுசாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

