செந்தில்பாலாஜிக்கு இறுகும் பிடி- சிபிஐ வழக்குப்பதிவு
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டரில் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் டெண்டர் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது CBI இன்று FIR பதிவு செய்துள்ளது. அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்திய புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் CBI மறுவிசாரணை செய்து, ஊழல், சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்துள்ளது.செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது எழுந்த முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த ஊழலில் முன்னாள் திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பங்கும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

