நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கம்

 
அ அ

தமிழகம் முழுவதும் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி ருபாய் சொத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது.ஆளுங்கட்சியின் ஆசீர்வாதத்தில் நியோமேக்ஸ்... கோடிக்கணக்கில் கொள்ளை போன  மக்கள் பணம்.. இனி என்னவாகும்? | Neomax with the blessings of the ruling  party... Crores of looted ...

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோ மேக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை ரியல் எஸ்டேட்  டெவலப்மென்ட்  திட்டம் என்ற பெயரில்  லட்சக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து 12% முதல் 30% வட்டி வரை அதிக வருமானம் தருவதாகக் கூறியது.இதனை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து  பல நூறு கோடிக்கு ருபாய்க்கு மேல் பொதுமக்கள் முதலீடு செய்தனர்.ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணம் திரும்ப செலுத்ததால் நியோமேக்ஸ்  பிரைவேட் லிமிடெட் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு  வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை  விசாரணையைத் தொடங்கியது.  அதில்  ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பிரதானமாக ரொக்கமாக சேகரித்து, இந்த நிதியை  ஹோட்டல் & ரிசார்ட்ஸ், மல்டி ஸ்பெஷாலிட்டி டிஸ்ட்ரிப்யூட் மருத்துவமனைகள், ஆகியவற்றில் ஈடுபடுத்தியது.  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.   பணமோசடி தடுப்புச் சட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 600.கோடி ருபாய் மதிப்பிலான  சொத்தை முடக்கி தற்போது அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.