அகழாய்வில் கிடைத்த புதிய கற்கால கற்கருவி - அமைச்சர் தகவல்

 
thangam thennarasu

அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி உள்ளிட்ட பல்வேறு  தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைத்தள பக்கத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில்  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

thangam thennarasu

இன்று (28.06.2024) ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது.. இக்கொழுமுனையின் எடை 1.292 கி.கி ஆகும். இதன் நீளம் 32 செ.மீ அகலம் 4.5 செ.மீ மற்றும் தடிமன் 3 செ.மீ கொண்டு காணப்படுகின்றது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவாசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழு முனையாக பயன்பட்டிருக்கலாம். இப் பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம். முழுமையான ஆய்விற்கு பிறகு எக்காலத்தினை சார்ந்தது என்பதை துல்லியமாக அறிய இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.