நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியின் உடல் நல்லடக்கம்

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நல குறைவால் இன்று காலை காலமானது. கோயில் யானை காந்திமதிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது பொதுமக்கள் அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அதன் பின் தாமரை குளம் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. யானை காந்திமதிக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மாநகர ஆணையாளர் சுகபத்திரா மற்றும் மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நெல்லை மாவட்டத்தில் செல்ல பிள்ளையாக இருந்த காந்திமதியின் உயிரிழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் இன்று காலை 7:30 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யானை இருந்ததினால் நிறைய தற்கோவிலில் இன்றைய பூஜைகள் காளையுடன் நிறுத்தப்பட்டது . மாலையில் யானையின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த பின் பரிகார பூஜை நடத்தப்பட்டு பிறகு கோவிலில் நடை திறக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு வயது 56. பக்தர் ஒருவரின் நன்கொடையாள் 1985 ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.