நெல்லை, தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம்- மேலும் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

 
ச்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவிற்குள் மர்மகும்பல் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் புகுந்து சாலையோரங்களின் நின்று கொண்டிருந்த 6  இளைஞர்களை கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர். மேலும் வெறி அடங்காத முகமூடி அணிந்த மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து நெல்லை மாவட்டம், பிரம்மதேசம், மானூர் தெற்குப்பட்டி உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வரும் வழிகளில் எல்லாம் பார்ப்பவர்களை தாக்கி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தெற்குப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் இருவரையும் வெட்டினர். 

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 8 பேரும் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை இந்த வழக்கில் தொடர்புடைய 9வது நபராக ஐயப்பன் என்பவரை காவல்துறையினர் பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்ற போது அவர் முத்துக்குமார் என்ற காவலரை தாக்கி தப்ப முயன்றார். அதனால் ஐயப்பன் வலது காலில் நெல்லை மாவட்ட காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி அவரைப் பிடித்தனர். காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை காவல்துறையினர்  கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது இந்த வழக்கில் தொடர்புடைய 20 வயது வாலிபர் 10 வதாக கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சிலர் கைது செய்யப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.