தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் போலீசில் சரண்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8வகுப்பு மாணவனை அரிவாளல் வெட்டிய சக மாணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சக மாணவனை வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவத்தின்போது மாணவனை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.