“காங்கிரஸ் எந்நேரத்திலும் திமுகவிடமிருந்து வெளியில் செல்ல தயாராக இருக்கிறார்கள்”- நயினார் நாகேந்திரன்

 
Nainar Nainar

காங்கிரஸ் கட்சி எந்த நேரமும் திமுகவிடமிருந்து வெளியில் செல்ல தயாராக இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

nainar-


நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜக சார்பில் முதல் கட்டமாக பாராளுமன்றம் வாரியாக பிரித்து  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஐந்து பாராளுமன்ற தொகுதிகளிலும் 30 தொகுதிகள் உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மூன்று பேரை எதிர்பார்க்கிறேன். அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 பேரில் யாராவது ஒருவர் பங்கேற்பார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து இங்கே இருக்கும் பூத் கமிட்டிகளுக்கு ஆட்களை நியமித்துள்ளோம். கூட்டணியோடு எப்படி சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பயிற்சியை நாங்கள் ஏற்கனவே நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளோம்.

தேர்தல் ஆணையத்தின் மீது வாக்காளர் பட்டியல் ஆவணங்களுடன்  ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ராகுல் காந்தி சொல்வதெல்லாம் உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது. வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகமானோர் தமிழகத்தில் வேலைக்காக வருகின்றனர். திமுகவினர் தான் அவர்களிடமிருந்து வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கின்றனர். திமுகவினர் கடுமையான தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எந்த நேரமும் திமுகவிடமிருந்து வெளியில் செல்ல தயாராக இருக்கிறார்கள்” என்றார்.