“தமிழர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பிரபல்யத்தை ரஜினிகாந்த் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்”

 
rajinikanth

தமிழர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பிரபல்யத்தை  நடிகர் ரஜினிகாந்த் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Exclusive: SDPI கட்சி யாருடன் கூட்டணி..? எங்கெல்லாம் செல்வாக்கு..? மனம்  திறக்கும் நெல்லை முபாரக்..! | SDPI State president Nellai Mubarak explains  his party alliance - Tamil Oneindia

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. ஒரு சினிமா பிரபலம் என்ற அளவில் அவரின் நடவடிக்கைகளுக்கு என்று ஊடகங்களில் தனி வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் உ.பி. சென்று அம்மாநில முதல்வரின் காலில் விழுந்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஊடகங்களின் கவனம் பெற்று பேசுபொருளாகின. தமிழகத்தில் தலைநிமிர்ந்து நடக்கின்ற ஒரு பிரபலம் உ.பி.யில் தலைகுனிந்துள்ளது என்கிற ஆதங்கம் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் ஏற்பட்டது.

யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது என்பது தனது பழக்கம் என விளக்கம் கொடுத்துள்ள ரஜினிகாந்த் அவர்கள், திருவண்ணாமலையிலோ அல்லது தமிழகத்தின் பல இடங்களில் காவி உடை அணிந்து வலம்வரும் சந்நியாசிகளின் காலில் விழுந்து வணங்கியதாக எந்த செய்திகளும் இல்லை. ரஜினிகாந்த் அவர்களுக்கு வேண்டுமானால் உ.பி. முதல்வர் புனிதராக தெரியலாம்; ஆனால் அவர் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்த குற்றவாளி; அவர்மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது முதல்வராக இருப்பதால் அவர் ஒன்றும் புனிதராக மாறிவிடப் போவதில்லை என்பதை பாஜகவின் அரசியல் பகடைக்காயாக மாறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும்.    

Internet reacts to Rajinikanth touching Yogi Adityanath's feet: 'Shocking'  - Hindustan Times

அதேபோல் அவர் அயோத்தியில் 400 ஆண்டுகாலம் வீற்றிருந்த, சங்கபரிவாரங்களால் தகர்க்கப்பட்ட, பாபரி மஸ்ஜித் வீற்றிருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். போகிற போக்கில் இதனை ஆன்மீகம் சார்ந்த ஒன்றாக கடந்து போகமுடியாது. காரணம் இரத்தம் சிந்திய தொடர் வன்முறைகள் மூலம் பாபரி மஸ்ஜிதையும், அதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை இடித்து தள்ளி, நீதியை மறுத்து சங்கப்பரிவாரங்களின் அடையாளமாக கட்டப்பட்டு வரும் இடத்திற்கு சென்று, தான் யார் என்பதை அவர் வெளிக்காட்டியுள்ளார். இதன்மூலம் தமிழர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார். தமிழர் விரோத, சிறுபான்மை விரோத சங்கபரிவார்களின் சட்டவிரோத செயல்களுக்கு தமிழர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பிரபலத்தை தவறாகப் பயன்படுத்தி துரோகமிழைத்துள்ளார்.  ரஜினி என்கிற பிரபலத்தின் மூலம் தங்களின் சட்டவிரோத அழிவு நடவடிக்கைக்கு சங்பரிவாரம் தமிழகத்தில் ஆதரவு திரட்ட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. சங்கபரிவாரத்தின் முயற்சிகளுக்கு  நடிகர் ரஜினிகாந்த் துணைபோயுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

ஆளுநரை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டம்- நெல்லை முபாரக்  பேட்டி | SDPI party condemned Protest governor behalf Nellai Mubarak

தமிழர்கள் மூலம் பிரபலமாக அறியப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள், தனது பிரபல்யத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளார். பாபரி மஸ்ஜித் வீற்றிருந்த இடத்தில் சங்கபரிவாரம் எழுப்பிவரும் ராமர் கோயிலை பார்வையிட்டதன் மூலம், சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் உணர்வுகளோடு கலந்துவிட்ட சட்டவிரோத பாபரி மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் ஜனநாயக விரோத தீர்ப்பு ஆகியவற்றை கொண்டாடும் சங்கபரிவாரத்தின் நாயகனாக தன்னை வெளிக்காட்டி, சிறுபான்மை சமூக மக்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளையும் அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.  எனவே, இதற்கு எதிராக தமிழர்கள் எதிர்வினையாற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் ஜனநாயக விரோத தீர்ப்பினை எதிர்த்த அனைவரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்.

சங்பரிவாரத்தின் சட்டவிரோத செயல்களை அங்கீகரிக்கும் வகையிலான ரஜினிகாந்த் அவர்களின் நடவடிக்கை ஆபத்தானது. எனவே அவரின் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும்.  சிறுபான்மை சமூக மக்களின், ஜனநாயக சக்திகளின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ்ச் சமூகத்திடம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.