மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம் - மாவட்ட ஆட்சியர் சரமாரி கேள்வி!

 
nellai

நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்ட பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.  மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். 

இதனிடையே கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அபாயகரமானவை இல்லை என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கழிவுகள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், அபாயகரமானவை இல்லை என்றால் ஏன் இவ்வளவு தூரம் கொண்டு வந்து கொட்ட வேண்டும்?  என நெல்லை மாவட்ட ஆட்சியர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.