நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா

 
நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா

நெல்லை மேயர் மீது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்த நிலையில் சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.

கோவை மேயர் கல்பனாவின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். நெல்லை மாநகராட்சியில் சில மாதங்களாக மேயர்- திமுக கவுன்சிலர்கள் இடையே கடுமையான மோதல்கள் இருந்து வந்தன.

நெல்லை, கோவை மேயர்கள் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி் மேலிட அறிவுறுத்தலின்படி இருவரும் ராஜினாமா என தகவல்கள் தெரிவிக்கின்றன.