நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் விவகாரம்- கணவர் பரபரப்பு விளக்கம்

தங்கள் மீது அவதூறு பரப்பிய கனிஷ்கா மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், வரதட்சணையாக ஒரு ரூபாய் கூட நாங்கள் வாங்கவில்லை எனவும் பல்ராம் சிங் மற்றும் அவரது தந்தை யுவராஜ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா திருநெல்வேலியில் தனக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாகவும், இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாக கேட்பதாகவும் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் கார் வாங்கித் தர தன்னை வற்புறுத்துவதாகவும் பரபரப்பை கிளப்பிய நிலையில் கோவையில் குற்றம் சுமத்தப்பட்ட கனிஷகாவின் கணவன் பல்ராம் சிங் , மற்றும் தந்தை யுவராஜ் சிங் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், தங்கள் மீதான வரதட்சனை கொடுமையை மறுத்ததோடு இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையே சமீபத்தில் தான் கனிஷ்காவின் பெற்றோருக்கு கிடைத்துள்ளது , அவர்களுக்கு 5 கோடி ரூபாய் கடன் இருக்கும்போது நாங்கள் எப்படி ஒரு கோடி ரூபாய் வரதட்சனை கேட்போம் மேலும் எங்களை ஏமாற்றி இந்த திருமணத்தை செய்து விட்டனர் இருந்தபோதிலும் மெக்கானிக் பெண்ணாக கனிஷ்கா திரும்பி வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதே சமயம் தங்கள் மீது அவதூறு பரப்பியதால் கனிஷகா மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் எனவும் தெரிவித்தனர். கனிஷ்கா தெரிவிக்கும் புகார் நடந்த நாட்களில் நான் மற்றும் எனது மனைவி கோவையில் இல்லாத போது தங்கள் மீது வீண்பழி சுமத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார் . மேலும் கனிஷ்காவின் தாய் கவிதா மனநிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அனைத்துக்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது அந்த பெண் சூட்கேஷில் நகைகளுடன் வந்தார். அதை எடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் டிபெண்டர் கார் 1.5 கோடி மதிப்பு அதனை தனது திருமணத்துக்கு முன்னரே புக் செய்து விட்டேன் என பல்ராம் சிங் விளக்கம் அளித்தார்.