நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்...!காவல் நிலையத்தில் மகள் புகார்!

 
nellai

அல்வாவுக்கு புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக அதன் உரிமையாளரின் மகள் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நெல்லை என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இருட்டு கடை அல்வாதான். அந்த அளவுக்கு இருட்டு கடை அல்வாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கடையை கவிதா சிங் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கவிதா சிங்கின் மகள் தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் தனது கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக நெல்லை இருட்டுக்கடையை தனது பெயருக்கு மாற்றி தருமாறு வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி தனது கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அந்த கடையின் உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கவிதா சிங்கின் மகள் அளித்துள்ள புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.