கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து - 300 அடி பள்ளத்தில் சிக்கிய 6 பேர்!!

 
TN

முன்னீர்பள்ளம் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது.

TN
நெல்லை அடைமதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வரும் நிலையில் நேற்று  நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய்  உட்பட 6 பேர் இதில் சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில்,  மீட்கும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டன. 

TNN

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும்,  மழை பெய்தாலும் சுமார் 300 அடி பள்ளத்தில் மீட்புப்பணி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது . அதேசமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராட்சத கிரேன்கள் மீட்புப்பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.