நேரு நினைவு தினம் - ராகுல் மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை கொண்டவர் ஜவஹர்லால் நேரு. இந்திய காங்கிரஸ் சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக இருந்த நேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் குடியரசு இந்தியாவில் முதல் பிரதமர் ஆகவும் பதவியேற்றார். அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு போருக்கு பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபராக மாறினார்.
உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு பதவியைத் துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். இதை தொடர்ந்து 1964 இல் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, 27 மே அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரது பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் திரு @kharge அவர்கள் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 27, 2023
#RememberingNehru pic.twitter.com/rHBG6yeiGx
இந்நிலையில் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.