போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை

 
BUS

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க  வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்  நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.போக்குவரத்துத்துறை இழப்பை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறப்பட்டது.

bus

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது. 27 தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

bus

15வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து, 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.