"தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, ஆலோசிக்க  அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஜன.8-ம் தேதி நடத்தமுடிவு எடுத்துள்ளோம். அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, விசிக, பாமக, பாஜக என அனைத்து கட்சிகளின்  சட்டமன்ற உறுப்பினர்களின் குழு தலைவர்கள் பங்கேற்றனர். 

stalin

இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் பிரதமரை கடந்த ஜூன் 17ஆம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதேபோல தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களில் வலியுறுத்தினர் இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதல் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆனால் அந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் ஒரு சட்டமன்றம் தனக்கிருக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் அதை மதித்து அதற்கு ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம் நான் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை இதே மாநில உரிமையும் சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாகிறது எனவே இந்த சூழலை கருத்தில் கொண்டு தான் அவசரமாக அவசியத் உடன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது

stalin

நம் அனைவருக்கும் ஒரே இலக்கு தான் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் தமிழ்நாட்டு மாணவர்களை தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் இந்த வரைவுத் தீர்மானத்தில் மீது தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள் " என்றார்.  நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என பாஜக தவிர்த்து மற்ற கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.  இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் நிறைவு பெற்றது.